திறைசேரி முறிப்பத்திர சம்பவம் தொடர்பிலான கோப் குழுவின் தலைவர் சுனில் ஹந்துன்நெத்தி முன்வைக்கும் அறிக்கையை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஏற்றுக்கொள்ளும் என அந்த கட்சி கூறியுள்ளது.
சுதந்திரக்கட்சி எவரையும் பாதுகாக்க உதவாது.
அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட பின்னர், அறிக்கையின்படி தவறு நடந்திருந்தால், அதற்கான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என அமைச்சர் சந்திம வீரக்கொடி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
பிணை முறிப்பத்திர சம்பவத்தில் நாட்டுக்கு நஷ்டம் ஏற்பட்டிருந்தால், நஷ்டத்தை அறவிட நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் சந்திம வீரக்கொடி குறிப்பிட்டுள்ளார்.