விஜேவீரவின் காணி அவரது மனைவிக்கு கிடைக்காது

Report Print Kamel Kamel in அரசியல்
214Shares

ஜே.வி.பி.யின் ஸ்தாபகத் தலைவர் ரோஹன விஜேவீரவின் காணி அவரது மனைவிக்கு கிடைக்காது என அறிவிக்கப்பட்டுள்ளது.

விஜேவீர இறுதியாக தங்கியிருந்த நாவலப்பிட்டி உலப்பனையில் அமைந்துள்ள வீடு மற்றும் காணியை தமக்கு வழங்குமாறு அவரது மனைவி சித்ராங்கனி விஜேவீர கோரியிருந்தார்.

இந்தக் காணி மற்றும் வீடு அரசுடமையாக்கப்பட்டது என்பதனால் அவற்றை மீள வழங்க முடியாது என கங்கஇஹல கோரளே பிரதேச செயலாளர் மங்கள விக்ரமராச்சி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதுவரையில் தங்கியிருந்த கடற்படை முகாம் வீட்டிலிருந்து வெளியேறிச் செல்வதனால் தமக்கு குறித்த வீட்டை வழங்குமாறு விஜேவீரவின் மனைவி பிரதேச செயலாளரிடம் கோரியிருந்தார்.

ஜனாதிபதி மற்றும் பாதுகாப்புச் செயலாளரின் ஊடாக இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 1990ம் ஆண்டு மே மாதம் 15ம் திகதி இந்த காணி மற்றும் வீடு அரசுடமையாக்கப்பட்டுள்ளது.

குறித்த வீடு தற்போது தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தினால் பயிற்சி நிலையமாக மாற்றப்பட்டுள்ளது. இந்த பயிற்சி நிலையத்தில் ஆண்டு தோறும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் கல்வி கற்கின்றார்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.

Comments