இலங்கையுடனான இருதரப்பு உறவுகளை பலப்படுத்த அஸர்பைஜான் முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அஸர்பைஜானுக்கான இலங்கையின் தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள யகுபிட்டிய குருப்பு ஆராச்சிகே ரொஹான்ஜித், தமது பதவிநிலை கடிதத்தை அஸர்பைஜான் ஜனாதிபதி இல்ஹாம் அலியாவ்விடம் கையளித்த போதே இந்த கருத்து கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் வர்த்தக தொடர்புகளில் முன்னேற்றம் காணப்படவேண்டியதன் அவசியம் குறித்தும் இரண்டு பேரும் கருத்துக்களை பகிர்ந்துக் கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.