சந்திரிக்காவின் அடுத்த அரசியல் நகர்வு! தொகுதி அமைப்பாளர்களுடன் மந்திராலோசனை

Report Print Vethu Vethu in அரசியல்
356Shares

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் மகனான விமுக்தி குமாரதுங்கவுக்கு அத்தனகல்ல தொகுதி அமைப்பாளர் பதவியை பெற்றுக் கொடுக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதற்காக மூத்த முன்னாள் தொகுதி அமைப்பாளர்களுடன், சந்திரிக்கா குமாரதுங்க இரகசிய கலந்துரையாடல்களை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குறித்த முன்னாள் தொகுதி அமைப்பாளர்களை தனது வீட்டிற்கு அழைத்து சந்திரிக்கா இவ்வாறு இரகசிய கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி மற்றும் ஐக்கிய தேசிய கட்சிக்கு இடையில் ஏற்பட்டுள்ள நெருக்கடி தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்ள வேண்டும் என தனக்கு நெருக்கமான தொகுதி அமைப்பாளர்களை சந்திரிக்கா அழைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Comments