ஜோன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு அடுத்த வருடம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்

Report Print Ramya in அரசியல்
26Shares

முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு அடுத்த வருடம் மார்ச் மாதம் 24 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று அறிவித்துள்ளது.

அமைச்சரவை ஒப்புதல் இன்றி லங்கா சதொசவிற்கு அரிசி இறக்குமதி செய்தமை தொடர்பில் இவருக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

2010 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் லங்கா சதொச நிறுவனத்தில் பணியாற்றிய 150 ஊழியர்களை அரசியல் செயற்பாடுகளில் ஈடுபடச் செய்துள்ளார் என்றும் ஜோன்ஸ்டன் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த வழக்கு தொடர்பில், லங்கா சதொச நிறுவனத்தின் முன்னாள் தலைவர் மற்றும் பணிநேர பணிப்பாளர் மீதும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments