கோப் அறிக்கை நாளை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்

Report Print Ajith Ajith in அரசியல்
41Shares

கடும் வாக்குவாதங்களுக்கு பின்னர் பொதுநிறுவங்கள் தொடர்பான நாடாளுமன்றக் குழுவான கோப் குழுவினர் ஏகமனதாக தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.

தமது நாடாளுமன்ற சிறப்புரிமைகள் குறித்து வெல்கம நேற்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதே பிரதிசபாநாயகர் தமது பதிலை இவ்வாறு வழங்கினார்.

இதன்படி மத்திய வங்கியின் முறிகள் கொள்வனவு தொடர்பிலான விசாரணையில் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் கோப் அறிக்கை, எதிர்வரும் வெள்ளிக்கிழமை கோப் தலைவர் சுனில் ஹந்துநெத்தியினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இந்த பிரச்சினையில் குற்றம் கண்ட கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கை தொடர்பில் கோப் குழுவின் ஐக்கிய தேசியக்கட்சி உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

எனினும் அதனை சுனில் ஹந்துன்நெத்தி ஏற்றுக்கொள்ளவில்லை.

இதன்போது இரண்டு தரப்புக்கும் இடையில் முறுகல் ஏற்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Comments