பாதுகாப்பு படையினருக்கு முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும்

Report Print Agilan in அரசியல்
59Shares

பாதுகாப்பு படையினருக்கு முறையான பயிற்சிகளை வழங்க வேண்டும் என அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.

இதன்போது தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் நடந்து கொண்ட விதம் முற்றிலும் தவறானது. யுத்தகாலத்தில் தேவையின் நிமித்தமாக பாதுகாப்பு படைக்கு சரியான பயிற்சி இன்றி பலர் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.எனினும் தற்போது எமக்கு அவர்களை பயிற்றுவிப்பதற்கான தேவையான கால அவகாசம் காணப்படுகிறது.

இப்போது நாம் அவர்களை பயிற்றுவித்து பாதுகாப்பு படைக்கு தகுதியானவர்களாக மாற்ற வேண்டும் என சுட்டிக்காட்டினார்.

மேலும் தற்போதைய நிலைமையின் அடிப்படையில் பாதுகாப்பு படையில் உள்ளவர்களுக்கு மன ரீதியானதும், உடல் ரீதியானதுமான பயிற்சிகளை கட்டாயம் அளித்தாக வேண்டும் எனவும் சுசில் பிரேமஜயந்த கூறியமை குறிப்பிடத்தக்கது.

Comments