வடக்கில் உள்ள வாள் வெட்டு கும்பலான ஆவா குழுவை எதிர்கொள்வதற்கு புதிய குழு அமைக்க தீர்மானித்துள்ளதாக பிக்குகள் குழு இன்று(27) தெரிவித்துள்ளது.
இதேவேளை, ராவண பலய அமைப்பின் பொதுச் செயலாளர் இத்தேகந்த சத்தாதிஸ்ஸ தேரர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
வடக்கில் உள்ள வாள் வெட்டு கும்பலான ஆவா குழுவில் எவரையும் இது வரையில் கைது செய்யவில்லை எனவே தாம் அவர்களை எதிர்க்கொள்ள புதிய குழு ஒன்றை அமைக்க தீர்மானித்துள்ளோம் என அவர் கூறியுள்ளார்.
குறித்த ஆவா குழு தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ள வட மாகாணத்தில் ஏற்கனவே பொலிஸார் நியமிக்கப்பட்டுள்ளதாக சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சர் சாகல ரத்னாயக்க இந்த வார நாடாளுமன்ற அமர்வின் போது தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.