வற் வரி சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் - கூட்டு எதிர்க்கட்சி தீர்மானம்

Report Print Ramya in அரசியல்
33Shares

வற் வரி சட்டமூலத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.

நாடாளுமன்ற அமர்வின் போது வற் வரி சட்டமூலம் நாடாளுமன்றில் நேற்று சமர்பிக்கப்பட்டது.

இந்த நிலையில்,வற் வரி சட்டமூலத்திற்கு நாடாளுமன்றில் இருந்த 76 பேரில் 53 பேர் சாதகமான வாக்குகளை அளித்துள்ளார்கள் என்றும், எஞ்சிய 23 பேர் அதற்கு எதிராக வாக்களித்துள்ளார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேவேளை, வற் வரி திருத்தம் பொதுமக்களுக்கு சுமத்தப்பட்டுள்ள மற்றுமொரு சுமை என ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த இரத்தினபுரி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் சொய்சா கூறியுள்ளார்.

இதன்போது, வற் வரி திருத்தம் தொடர்பில் பொது மக்களின் நலன் கருதி கூட்டு எதிர்க்கட்சியினர் பல எதிர்ப்புக்களை தெரிவித்திருந்த நிலையிலும் நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அவற்றை நிராகரித்துவிட்டு வற் வரி சட்ட மூலத்தை நாடாளுமன்றில் சமர்பித்தார் என்று ரஞ்சித் சொய்சா சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது

Comments