தயங்கும் மைத்திரி - தயங்காத மஹிந்த...! கோத்தபாய சாடல்

Report Print Murali Murali in அரசியல்
284Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ச நாட்டுக்காக சில தீர்மானங்களை தயக்கமின்றி எடுத்ததாக முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

எனினும் தற்போது அவ்வாறான தீர்மானங்கள் எடுப்பதாக தென்படவில்லை எனவும் அவர் கூறியுள்ளார். அநுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், ராஜபக்ச குடும்பத்தில் ஒருவரை சிறைக்கு அனுப்புவதற்கு அரசாங்கம் விரைவாக தயக்கமின்றி தீர்மானம் எடுக்கின்றது.

இவ்வாறான பின்னணியிலேயே தற்போது சமூக ஊடகங்கள் வாயிலாக தற்போதைய அரசாங்கத்திற்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படுகின்றன.

இதன் காரணமாக இருவரில் ஒருவரே நாட்டை நிர்வாகிக்க வேண்டும் என்று முன்னாள் ஜனாதிபதி கூட தெரிவித்திருப்பதாக அவர் இதன் போது சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த அரசாங்கத்தின் போது அசுத்தமடைந்த நிலையில் காணப்பட்ட கொழும்பு நகரை குறுகிய காலத்தில் வளர்ச்சியடையும் நகரமாக மாற்றியமைக்கப்பட்டது.

இதேவேளை, விசாரணைகள் மேற்கொள்ளும் நிறுவனங்கள் அரசியல் நோக்குடன், செயற்படுவதை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன விளங்கிக் கொண்டு உரையாற்றி இருப்பதை தாம் வரவேற்பதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments