தமக்கு உயிர் அச்சுறுத்தல்! எனினும் பயப்பட போவதில்லை!- ஜயம்பதி விக்கிரமரட்ன

Report Print Ajith Ajith in அரசியல்
77Shares

இலங்கையின் அரசியலமைப்பு பணிகளில் இருந்து விலகிக்கொள்ளுமாறு தமக்கு அச்சுறுத்தல்விடுக்கப்பட்டதாக ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதிவிக்கிரமரட்ன தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவர் இதனை நேற்று தெரிவித்தார். நாடாளுமன்ற வரப்பிரசாத நிலையில் இந்தப் பிரச்சினையை அவர் குறிப்பிட்டார்.

நேற்று முன்தினம் செவ்வாய்க்கிழமையன்று தமக்கு வந்த தொலைபேசி அழைப்பின் போது இந்தஅச்சுறுத்தல் விடுக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.

இதன் போது அரசியலமைப்பு தயாரிப்பு நடவடிக்கைகளில் இருந்து விலகாது போனால் தாமும் தமதுகுடும்பமும் கொல்லப்படப் போவதாக அச்சுறுத்தப்பட்டது என்று விக்கிரமரட்ன தெரிவித்தார்.

இது தொடர்பில் தாம் வெலிக்கடை பொலிஸில் முறையிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

எனினும் சமசமாஜக்கட்சியின் மூலம் அரசியலுக்கு வந்த தாம் அச்சுறுத்தல்களுக்கு பயந்துஅரசியலமைப்பு தயாரிப்பு பணிகளில் இருந்து விலகப் போவதில்லை என்றும் அவர்தெரிவித்தார்.

Comments