புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் - எஸ்.பி. திஸாநாயக்க

Report Print Kamel Kamel in அரசியல்
46Shares

புதிய முறையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடைபெறும் என சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

உள்ளுராட்சி மன்றத் தேர்தலை புதிய முறையில் நடாத்துவதற்கு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கும் இடையில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

இந்தப் பேச்சுவார்த்தையின் போது புதிய முறையில் தேர்தல் நடத்தத் தீர்மானிக்கப்பட்டது. புதிய முறையில் எதிர்வரும் மார்ச் மாதத்திற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்படும்.

விகிதாசார முறையில் மட்டும் தேர்தல் நடத்துமாறு நாடாளுமன்றில் யோசனை முன்வைக்கப்பட்ட போதிலும், எதிர்காலத்தில் அவ்வாறான யோசனைகள் முன்வைக்கப்படாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Comments