ஐக்கிய தேசிய கட்சியினருடன் இரகசிய பேச்சுவார்த்தை நடத்தும் பசில்!

Report Print Vethu Vethu in அரசியல்
111Shares

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் பெயரை பயன்படுத்தி பசில் ராஜபக்ச தனது மலர் மொட்டை முன்னோக்கி கொண்டு செல்வதாக ராஜாங்க அமைச்சர் லக்ஷ்மன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

மஹிந்த ராஜபக்ச தற்போது வரையில் அந்த கட்சியில் உறுப்புரிமையேனும் பெற்றுக் கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் முக்கியஸ்தர்கள் ஒருவரும் அந்த கட்சியில் உறுப்புரிமை பெற்றுக் கொள்ளவில்லை. தான் உள்ளிட்ட குழுவினர் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சமகால தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு பலமாக இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.

பசில் ராஜபக்ச, ஐக்கிய தேசிய கட்சியின் 3 முக்கிய உறுப்பினர்களுடன் இரகசிய கலந்துரையாடல் மேற்கொண்டுள்ளதை நம்பத்தகுந்த தகவல் வட்டாரங்கள் ஊடாக அறிந்து கொண்டதாக இராஜாங்க அமைச்சர் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் இந்த இரகசிய சந்திப்பில் எவ்வாறான இணக்கப்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன என்பது தொடர்பில் தகவல் வெளியாகவில்லை என ராஜாங்க அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

Comments