ஹம்பாந்தோட்டை துறைமுகம் தொடர்பில் விமல் குற்றச்சாட்டு

Report Print Nivetha in அரசியல்
61Shares

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவின் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கான அதிகாரம், துறைமுக விவகார அமைச்சின் செயலாளருக்கு அமைச்சரவை பத்திரம் ஒன்றின் ஊடாக வழங்கப்பட்டுள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டை தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச முன்வைத்துள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

ஹம்பாந்தொட்டை துறைமுகத்தை விற்பனை செய்வதற்கான முன்னெடுப்புகளை அரசாங்கம் மேற்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

துறைமுக விவகார அமைச்சர், துறைமுக அதிகார சபையின் தலைவர் மற்றும் பணிப்பாளர் சபை என்பவற்றின் எதிர்ப்பையும் மீறி இதற்கான முன்னெடுப்பு இடம்பெறுவதாகவும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச கூறியுள்ளார்.

Comments