ஐ ஆம் தி பாஸ்...'- லண்டன் டாக்டரை பார்த்து சொன்ன ஜெயலலிதா

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
4354Shares

முதல்வர் ஜெயலலிதா இறந்ததையொட்டி அப்போலோவில் இரங்கல் நிகழ்ச்சி நடந்தது. அந்த நிகழ்ச்சியில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த டாக்டர்கள், நர்ஸுகள், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அப்போது பேசிய ஒரு டாக்டர், "முதல்வர் ஜெயலலிதாவுக்கு லண்டர் டாக்டர் ரிச்சர்ட் பெய்ல் சிகிச்சை அளிக்க வந்திருந்தார்.

அப்போது ஆறுதலாக ஆங்கிலத்தில் அவர் பேசினார். நீங்கள் தைரியமாக இருங்கள். எந்தக் கவலையும் வேண்டாம். உங்களுக்காக பெரிய டீமே சிகிச்சை அளிக்க காத்திருக்கிறது.

அந்த டீமிக்கு நான் தான் பாஸ். உங்கள் அருகிலேயே இருந்து கவனித்துக்கொள்வேன் என்றார். அதை உன்னிப்பாக கேட்ட ஜெயலலிதா தனது கை விரலை உயர்த்தி சைகையில், நீங்கள் பாஸ் அல்ல. நான்தான் பாஸ் என்பதை குறிப்பில் உணர்த்தினார். இதைப்பார்த்த நாங்கள் அசந்துப்போய்விட்டோம்.

சிம்மராசிக்காரராச்சே...! அந்த கர்ஜனை அப்போதும் ஒலித்தது. டாக்டர் பெய்லுக்கு அது புரியவில்லை. எங்களுக்கு நன்றாக புரிந்தது. இதற்கிடையில் ஒரு நாள், வீட்டுக்கு ஏன் அழைத்துப்போகவில்லை என்று சொல்லி கடுங்கோபத்தில் இருந்தார்.

காலை, மதியம், இரவு சாப்பிட மறுத்தார். உண்ணாவிரதப்போராட்டமே நடத்தினார். தகவல் கேள்விப்பட்டு, சசிகலா எங்களிடம் வந்து பேசினார்.

"வீட்டுக்கு அழைத்துச் செல்வதில் பிரச்சினை என்னவென்றால், பெரியம்மா...முதல்மாடியில் இருப்பார். கீழே இறங்கிவர மாட்டார். டாக்டர் வந்திருக்கிறார் என்று சொன்னால், கேட்க மாட்டார்.

நேரம் கழித்துத்தான் வருவார். லண்டன் டாக்டர், எய்ம்ஸ் டாக்டர்...இவர்களெல்லாம் படு பிஸியானவர்கள். ஒரு முறை பொறுத்துக்கொள்வார்கள். அடுத்தடுத்த முறை அழைத்தால், ஏதாவது காரணம் சொல்லி சமாளித்துவிடுவார்கள்.

இங்கே... ஆஸ்பத்திரியில் இருந்தால் டாக்டர்கள் வந்து பார்க்க வசதியாக இருக்கும். அதனால்தான் நான் டிசம்பர் 15-வாக்கில் வீட்டுக்கு அழைத்து செல்ல நினைக்கிறேன்.

இதை மனதில் கொண்டு பெரியம்மாவிடம் சமாதானம் சொல்லுங்கள். நீங்கள் சொன்னால்தான்..கேட்பார்" என்று சொன்னாராம். அதன்படியே, நாங்கள் சொன்னதும், ஜெயலலிதா கேட்டுக்கொண்டார்" என்றாராம்.

- Vikatan

Comments