ஜெயலலிதாவின் அரசியல் வாரிசு அஜித்! அடுத்த முதல்வராவதற்கான வாய்ப்பு அதிகம்?- தமிழகத்தில் சர்ச்சை

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்
1981Shares

தமிழகத்தின் அடுத்த முதலமைச்சராக சினிமா நடிகர் அஜித் வரவிருக்கிறார் என வெளியான செய்தியினால் பரபரப்பு ஏற்பட்டிருக்கிறது.

கடந்த 5ஆம் திகதி இரவு தமிழக முதலமைச்சர் செல்வி ஜெயலலிதா மாரடைப்பினால் அப்பல்லோ மருத்துவமனையில் உயிரிழந்தார்.

அவரின் இறுதிக் கிரியைகள் நேற்று முன்தினம் முழு அரச மரியாதையுடன் நடைபெற்றது.

இந்நிலையில், இந்தியப் பிரதமர், குடியரசுத்தலைவர், முக்கிய அரசியல் பிரதிநிதிகள், சினிமா நட்சத்திரங்கள், தொண்டர்கள் பொது மக்கள் என ஏராளமானவர்கள் முதலமைச்சரின் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டிருந்தனர்.

எனினும் திரைப்பட வேலையில் ஈடுபட்டிருக்கும் முன்னணி நடிகர்களில் ஒருவரான அஜித் பல்கேரியாவில் படப்பிடிப்பில் இருந்திருக்கிறார்.

முதலமைச்சர் இறந்த செய்தி அவருக்கு பிந்தியே கிடைத்திருக்கிறது.

இதனால் முதலமைச்சரின் இறுதி நிகழ்வில் அவரால் கலந்துகொள்ள முடியவில்லை.

இந்நிலையில், நேற்றைய தினம் பல்கேரியாவிலிருந்த அஜித் அவசரமாக இந்தியாவுக்கு வந்தார்.

சென்னை விமான நிலையத்திற்கு வந்தடைந்த அவர், நேரடியாக அவருடைய மனைவியோடு தமிழக முதலமைச்சர் அடக்கம் செய்யப்பட்டிருந்த இடத்திற்கு சென்று அஞ்சலி செலுத்திவிட்டு வந்தார்.

இதனை செய்தியாக வெளியிட்ட மலையாள தொலைக்காட்சிகள். அதோடு இணைத்து இன்னுமொரு செய்தியினையும் வெளியிட்டு இருக்கிறது.

அதாவது, ஜெயலலிதாவின் அரசியல் வாரிசும், அடுத்த முதல்வரும் அஜித் என்று குறிப்பிட்டிருக்கின்றன.

இந்தச் செய்தியினால் அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளதுடன், இச்செய்தியினை சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர்.

எனினும் கருத்து வெளியிட்டுள்ள நடிகர் அஜித் தரப்பினர், முதல்வர் செல்வி ஜெயலலிதாவின் தைரியம், பண்பு உள்ளிட்டவை அஜித்துக்கு ரொம்ப பிடிக்கும். அவரை தாயைப் போல் நினைத்தவர் அஜித்.

இதனால், அவருக்கு நேரில் அஞ்சலி செலுத்த வேண்டும் என அங்கிருந்து முயற்சி செய்தார். எனினும் அவரால் சரியான நேரத்திற்கு வரமுயவில்லை. இதனால் மிகுந்த சோகத்தில் உள்ளார்.

மற்றபடி அவருக்கு அரசியலில் ஈடுபடும் எண்ணம் இப்போது மட்டுமல்ல, எப்போதுமே இருந்தது கிடையாது.

இப்படி இருக்கையில், ஏன் அவருடைய பெயர் அடிபடுகிறது என்பது பெரும் புதிராகவே உள்ளது என தெரிவித்துள்ளனர்.

இதேவேளை முதலமைச்சர் ஜெயலலிதா உடல் நலம் சரியில்லாமல் அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த வேளை அடுத்த முதலமைச்சராக அஜித்தை தான் ஜெயலலிதா நியமிப்பார் என வதந்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Comments