குமார் குணரட்னத்திற்கு குடியுரிமை வழங்க வேண்டும்: விமல் வீரவங்ச

Report Print Steephen Steephen in அரசியல்
53Shares

முன்னிலை சோசலிசக் கட்சியின் அரசியல் சபை உறுப்பினர் குமார் குணரட்னத்திற்கு இலங்கையின் குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

தனக்கும் அவருக்கும் இடையில் அரசியல் ரீதியான எந்த வேறுபாடுகளுடன் கூடிய கொள்கைகளை கொண்டிருந்தாலும் குமார் குணரட்னத்திற்கு இலங்கையில் குடியுரிமை வழங்கப்பட வேண்டும். அது அவரது நாட்டு வாசி என்பதற்கான உரிமை.

குமார் குணரட்னத்திற்கும் எமது அரசியல் கொள்கைகளுக்கும் இடையில் வேறுபாடுகள் இருக்கின்றன என்பது உண்மை. கொள்கைகள் எப்படி இருந்தாலும் அவர் இந்த நாட்டில் பிறந்து வளர்ந்தவர்.

விசேட காரணங்களுக்காக அவர் வெளிநாடு ஒன்றின் பிரஜையாக மாற நேர்ந்திருக்கலாம்.

தனது நாட்டின் குடியுரிமையை வழங்குங்கள் என அவர் கோருவாராக இருந்தால், கட்டாயம் வழங்க வேண்டும். அதனை வழங்காதிருக்க எந்த நியாயமான காரணங்களும் இல்லை.

அவருக்கு குடியுரிமை வழங்க வேண்டும். அவர் தனது அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்க சுதந்திரம் வழங்க வேண்டும்.

அவரது அரசியல் நிலைப்பாடுகளில் தவறுகள் இருந்தால், அது பற்றி விவாதிப்பது வேறு விடயம். குடியுரிமை விடயத்தில் அதனை சம்பந்தப்படுத்திக்கொள்ள கூடாது.

குமார் குணரட்னம் மக்கள் விடுதலை முன்னணியில் வெளியில் பிரபலமில்லாத செயற்பட்ட தலைவர்களில் ஒருவர். 1994ம் ஆண்டில் கட்சியை மீள ஒருங்கிணைப்பதிலும் அவர் பங்காற்றினார்.

மக்கள் விடுதலை முன்னணியின் அரசியல் சபையின் உறுப்பினராகவும் இருந்தால், அவரை தெரியாது எனக்கூறும் அந்த முன்னணியின் தலைவர்களுக்கு ஞாபக மறதி நோய் இருக்கின்றது எனவும் விமல் வீரவங்ச குறிப்பிட்டுள்ளார்.

Comments