ஜனாதிபதியின் மலேசிய விஜயத்தில் பல ஒப்பந்தங்கள் கைச்சத்திடப்படும்!

Report Print Ajith Ajith in அரசியல்
53Shares

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மலேசிய விஜயத்தின் போது அந்நாட்டுடன் பல இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படவுள்ளன.

மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு எதிர்வரும் 15 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கோலாலம்பூர் செல்லவுள்ளார்.

இதன்போது,

1. சுற்றுலா ஒத்துழைப்பு ஒப்பந்தம்

2. பயிற்சி, ஆய்வுகள் துறையில் ஒத்துழைப்பு மற்றும் பொது நிர்வாகம் ஒப்பந்தம்

3. இலங்கை விவசாய ஆராய்ச்சி கொள்கை சபை மற்றும் மலேசிய விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

4. இலங்கை பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சு மற்றும் மலேசியாவில் உள்ள பெருந்தோட்டக் கைத்தொழில் அமைச்சுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் 5. கலாச்சார, கலை, பண்பாட்டு துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம்

6. இளைஞர் மேம்பாட்டு துறையில் ஒத்துழைப்பு ஒப்பந்தம் ஆகிய இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் ஜனாதிபதியின் மலேசிய விஜயத்தில் கைச்சாத்திடப்படவுள்ளன.

இதற்கான ஒப்பந்த வரைவு வெளிவிவகார பிரதியமைச்சர் ஹர்ஸ டி சில்வாவால் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Comments