பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் தேசத்துரோகிகள் என அறிவிக்கப்பட்டு தண்டிக்கப்பட்ட 19 பேரை 198 ஆண்டுகளுக்கு பின்னர் குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுத்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அவர்களை தேசிய வீரர்கள் என உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.
கெப்பட்டிபொல திஸாவ, கொடகெதர ரட்டே அதிகாரம், கெட்டகால மொஹொட்டாலே, கதரகத மஹா பெத்தமே ரட்டே ரால, கதரகம குடா பெத்தமே ரட்டே ரால, பலங்கொல்ல மொஹொட்டாலே, வத்தேகாலே மொஹொட்டாலே, களுகமுவே மொஹாட்டோலே, உடுமாதுர மொஹொட்டாலே, கொஹூகும்புர வளவ் ரட்டே ரால, கொஹூகும்புர வளவ்வே மொஹொட்டாலே, புட்டேவே ரட்டே ரால, ஹகினிகஹவேல ரட்டே ரால, மஹா பதுள்ளே கம்மானே ரட்டே ரால, புளுபிட்டியே மொஹொட்டாலே, பள்ளே மல்ஹேயாயே கமதிராலே ஆகியோர் போர் வீரர்கள் என ஜனதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று அறிவித்தார்.
1818 ஆம் ஆண்டு ஊவா வெல்லஸ்ஸ கிளர்ச்சிக்கு தலைமை தாங்கியதன் காரணமாக அன்றைய பிரித்தானிய ஆள்பதி ரொபர்ட் பிரவுண்ரிக் 1818 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18 ஆம் திகதி விசேட வர்த்தமானி அறிவித்தல் மூலம் இவர்கள் அனைவரையும் தேசத்துரோகிகள் என அறிவித்திருந்தார்.