இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் சபை பிரதிநிதிகள் சிலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அவரது உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் சந்தித்தனர்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைமைகள் மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து இதன் போது பேசப்பட்டுள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவர் டியூ. குணசேகர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மகிந்த அமரவீர ஆகியோரும் இதில் கலந்து கொண்டனர்.
இலங்கை கம்யூனிஸ்ட் கட்சி ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் கூட்டணி கட்சியாகும். எனினும் டியூ. குணசேகர தலைமையிலான குழுவினர் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்புடன் இணைந்து செயற்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தல் தொடர்பான விடயத்தில் இன்றைய சந்திப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது என கருதப்படுகிறது.