நிஹால் ஜயதிலக்க வெளிநாடு செல்ல அனுமதி

Report Print Steephen Steephen in அரசியல்
28Shares

பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் முன்னாள் செயலாளர் மருத்துவர் நிஹால் ஜயதிலக்க ஆகியோர் வெளிநாடு செல்ல மேல் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

மருத்துவ சிகிச்சைக்காக வெளிநாடு செல்ல அனுமதி வழங்குமாறு அவர்கள் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.

கோரிக்கையை ஏற்றுக்கொண்ட கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி டி.எம். கருணாதிலக்க, ஒருவர் தலா இரண்டு 50 மில்லியன் உறுதிப்பிணை மற்றும் தலா இரண்டு 50 மில்லியன் ரூபா சரீரப் பிணையில் வெளிநாடு செல்ல அனுமதி வழங்கினார்.

அத்துடன் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் எதிர்வரும் மார்ச் மாதம் 15 ஆம் திகதிக்கு முன்னர் நாடு திரும்ப வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

கடந்த ஜனாதிபதித் தேர்தல் சமயத்தில் திவிநெகும நிதியில் இருந்து 2 ஆயிரத்து 981 மில்லியன் பணத்தை திவிநெகும பயனாளிகளுக்கு கூரை தகடுகளை வழங்க பயன்படுத்தியதன் மூலம் அரச பணத்தை சட்டவிரோதமான முறையில் பயன்படுத்தியுள்ளதாக குற்றம் சுமத்தி சட்டமா அதிபர் பசில் ராஜபக்ச உட்பட ஏனையோருக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்துள்ளார்.

Comments