கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக வழக்குத் தொடர தீர்மானிக்கப்பட்டுள்ளது.
டொப் டென் என்ற பெயரில் ஆளும் கட்சியின் அமைச்சர்களுக்கு எதிராக போலிக் குற்றச்சாட்டுக்களை, கூட்டு எதிர்க்கட்சியின் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுமத்தி வருவதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு போலிக் குற்றச்சாட்டு சுமத்தும் இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் முன்னிலையில் இந்த இரண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களும் போலி முறைப்பாடுகளை செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
போலிக் குற்றச்சாட்டுக்களை சுமத்தி வரும் ஏனைய நபர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டொப் டென் பெயர் பட்டியலின் அடிப்படையில் பிரதமர், அமைச்சர்களான ரவி கருணாநாயக்க, மலிக் சமரவிக்ரம, தலதா அதுகோரள ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அமைச்சர்களை அபகீர்த்திக்கு உள்ளாக்கும் நோக்கில் போலிக் குற்றச்சாட்டுக்கள் சுமத்தி வருவதாக அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.