அமைச்சர்களுக்கு அவசியமான அளவு வாகனம் பயன்படுத்துவதற்கான அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், தனது ஆட்சியின் போது வெளியிட்ட சுற்றறிக்கைக்கமைய அந்த அரசாங்க அமைச்சர்கள் செயற்பட்டுள்ளதாகவும், தற்போதைய அரசாங்கம் அந்த சுற்றறிக்கையை மீறி செயற்படுவதாகவும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச மீது வாகனங்களை தவறாக பயன்படுத்தியதாக சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
விமல் வீரவன்ச வாகனம் ஒன்றை யாருக்கு வழங்கினார் என தேடுகின்றார்கள். அமைச்சர் என்ற வகையில் அவருக்கு வாகனம் பயன்படுத்துவதற்கு சுதந்திரம் உள்ளது.
வாகனத்தை தேவையான அளவு பயன்படுத்துவதற்கு உரிமை உண்டு என சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டது. மேலதிக வாகனம் அவசியம் என்றால் எங்களுக்கு அறிவித்து பெற்றுக் கொள்ளுமாறு கூறப்பட்டதற்கமைய அவர் தனது கடமைகளை நிறைவேற்றினார்.
இன்று சில அமைச்சர் அதனை போன்று வாகனங்களில் செல்கின்றார்கள். சில தலைவர்கள் செல்லும் திசையை நாங்கள் பார்த்துக் கொண்டிருந்தோம்.
20 முதல் 22 வாகனங்கள் ஒரு வரிசையில் செல்கின்றது. வாகனம் ஒன்றை பயன்படுத்தினால் அரசாங்க சொத்துக்களை பயன்படுத்துவதற்கு ஒப்பானதாகும் என எங்களுக்கு தெரியாதென மஹிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.