புத்தசாசன அமைச்சர் நாடாளுமன்றில் தெரிவித்த கருத்து கவலையளிக்கிறது! வடக்கு முதலமைச்சர்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்
171Shares

வடமாகாணத்தில் பெளத்த விகாரைகளை அமைக்கக் கூடாது என வடமாகாணசபையில் தீர்மானம்நிறைவேற்றப்பட்டதாக புத்தசாசன அமைச்சர் விஐயதாச ராஐபக்ச நாடாளுமன்றத்தில்பேசியிருப்பது கவலையளிக்கிறது. என வட மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்கூறியுள்ளார்.

நாடாளுமன்றில் புத்தசாசன அ மைச்சர் விஐயதாச ராஐபக்‌ச கூறியிருக்கும்கருத்துக்கு பதிலளித்துமுதலமைச்சர் விடுத்துள்ள செய்திக் குறிப்பிலேயே மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

குறித்த செய்தி குறிப்பில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது,

எனக்கு நன்றாக அறிமுகமான ஒருவரான அமைச்சர் விஜயதாச ராஜபக்ச அவர்கள் மேற்படிகூற்றை வெளியிட முன்னர் என்னுடன் தொடர்பு கொண்டிருக்கலாம்.

அவ்வாறில்லாமல்தவறான செய்திகளை முன்வைத்து தவறான கருத்துக்களை பாராளுமன்றத்தில் பதிய வைப்பதுகவலைக்குரியதாக அமைகின்றது.

பௌத்தர்கள் வாழாத இடத்தில், சட்டத்திற்குப்புறம்பாக, சட்ட அனுமதி பெறாமல், பலாத்காரமாகப் புத்தர் சிலைகளைத் தனியார்காணிகளில் இராணுவத்தினரின் துணையுடன் அமைப்பதையே நாங்கள் கண்டிக்கின்றோம்.

புத்தர் சிலையென்ன, இந்துத் தெய்வங்களின் சிலையென்ன, கிறீஸ்தவர்களின் சிலையென்ன வேறெந்த மதத்தவர் சிலையென்றாலும் சட்டப்படி அமைப்பதை நாங்கள் தடுக்கமாட்டோம்.

தான்தோன்றித்தனமாக அமைத்தால் அதற்கு எங்கள் ஆட்சேபனையைத்தெரிவிக்கத் தயங்கவும் மாட்டோம்.

அமைச்சர் விஜேதாச அவர்களின் கூற்றுக்கள் எமதுதமிழ்ப் பேசும் மக்களுக்கே ஆத்திரமூட்டியுள்ளன. சொல்லாததைச் சொன்னதாகக் கூறிக்குற்றஞ்சாட்டினால் யாருக்குத் தான் ஆத்திரம் வராது.

இலங்கை சுதந்திரம் அடைந்த பின்னர் தென்பகுதியில் இருந்த தமிழ் மக்கள் எவ்வாறுவிரட்டியடிக்கப்பட்டார்கள், அவர்கள் ஆலயங்கள் எவ்வாறு சூறையாடப்பட்டுஅழிக்கப்பட்டன, அதன் பின்னர் அவற்றுள் பெரும்பான்மையானவை மீளக் கட்டப்படவில்லைபோன்றவை பற்றியெல்லாம் திரு.ராஜபக்ச அவர்கள் அறியாதவராக இருக்க முடியாது.

இந்து மக்கள் விரட்டி அடிக்கப்பட்ட காரணத்தினால் தெற்கில் இந்துக் கோயில்கள்கட்ட வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. ஆனால் பௌத்தர் அல்லாதோர் வசிக்கும்இடங்களில் இராணுவத்தினரின் உதவியுடன் பௌத்த கோயில்களைத் தனியார் காணிகளில்கட்ட முற்படுவது ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகவே கொள்ள வேண்டியுள்ளது.

அண்மையில் சிங்கள அகராதியின் ஆசிரியர் வணக்கத்திற்குரிய கலாநிதி அகுரடியேநந்தா தேரோ அவர்கள் வேறு இரு பௌத்த பிக்குமார்களுடன் என்னைச் சந்திக்கவந்தார்கள்.

அவர்கள் கூட பௌத்தர் இல்லாதோர் இடங்களில் சட்டத்திற்குப் புறம்பாகபுத்தர் சிலைகளை நிர்மாணிப்பதைத் தாம் கண்டிப்பதாகக் கூறினார்கள்.

சட்டப்படிமனுச் செய்து எந்த மதத்தினரும் உரியவாறு தமது வணக்கஸ்தலங்களை வட மாகாணத்தில்அமைக்கலாம். சட்டத்திற்குப் புறம்பாக அமைப்பது பற்றியே நாங்கள் கருத்துத்தெரிவித்தோம்.

Comments