ஹட்டன் ஆரியகம பகுதியின் ஒரு பகுதிக்கு பாதை செப்பனிடப்பட்டு மக்கள் பாவனைக்காக திறந்து வைக்கும் நிகழ்வு நடைபெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமான் தலைமையில் குறித்த நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச் செயலாளரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஆறுமுகன் தொண்டமானின் 8 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் இப்பாதை கொங்கீறிட் பாதையாக புனரமைக்கப்பட்டு வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவரும், நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான முத்து சிவலிங்கம், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பி.இராஜதுரை, முன்னாள் அம்பகமுவ பிரதேச சபை தலைவர் வெள்ளையன் தினேஷ், இளைஞர் அணி அமைப்பாளர் ராஜமணி பிரசாத் என பல முக்கியஸ்தர்களும் கலந்து கொண்டுள்ளனர்.