ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையே மோதலை ஏற்படுத்த முயற்சி

Report Print Ajith Ajith in அரசியல்
58Shares

ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் இடையில் முரண்பாட்டை தோற்றுவிக்க ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் அமைச்சர்கள் சிலர் முயற்சிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்புமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் குற்றஞ்சாட்டியுள்ளார்.

கட்சித் தலைமையகமான சிறிகொத்தவில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர்சந்திப்பின்போதே அவர் இந்த குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.

இதன்போது மேலும்தெரிவித்துள்ள அவர்,

ஐக்கிய தேசியக் கட்சியியுடன் டீல் போட்டு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை உடைக்கும்முயற்சியில் பஸில் ராஜபக்ஸ ஈடுபடுவதாக அமைச்சர் டிலான் பெரேரா கூறி வருகின்றார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியைப் பாதுகாத்துக் கொள்வது உங்களின் பொறுப்பு என நான்அமைச்சர் டிலான் பெரேராவுக்கு கூறுகின்றேன்.

ஜனாதிபதியை தலைவராக ஏற்றுக்கொள்ள ஏதாவது ஒரு தரப்பினர் தயாரில்லை என்றால் அதுஐக்கிய தேசிய கட்சியின் பிரச்சினையல்ல. உங்களின் பிரச்சினை.

எவருடனும் டீல் போட்டு ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை உடைக்க வேண்டிய தேவை ஐக்கியதேசியக் கட்சிக்கு இல்லை. அவ்வாறு உடைப்பதாயின், கடந்த நாடாளுமன்றத்தேர்தலிலின்போதே அதனைச் செய்திருக்கலாம். நாம் அவ்வாறு செய்யவில்லை.

நாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை பாதுகாத்துள்ளோம்.50 பேர் வெளியே இருந்து மஹிந்த ராஜபக்ஸவுக்கு தேவையானதை செய்கின்றனர்.

மறுபுறத்தில் அமைச்சுப் பதவிகளை வகித்துக்கொண்டு ஜனாதிபதிக்கும் பிரதமருக்கிடையேமுரண்பாடுகளைத் தோற்றுவிக்க முயற்சிக்கின்றனர்.

ஜனாதிபதியும் பிரதமரும் இணைந்து முன்னெடுக்கும் பயணம் குறித்து அவர்களுக்கு மகிழ்ச்சிஇல்லை. நம்பிக்கை இல்லை.

இதை சீர்குலைக்கவே அவர்களது செயற்பாடுகள் அமைவதாக எமக்குசந்தேகம் எழுந்துள்ளது. என்று நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் மேலும்தெரிவித்துள்ளார்.

Comments