தனது தந்தையான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சீன விஜயத்திற்கும் அம்பாந்தோட்டை துறைமுக ஒப்பந்தத்திற்கும் இடையில் எந்த தொடர்பும் இல்லை என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணிக்க ஏற்பட்ட செலவு மற்றும் நிர்மாணப் பணிகளை சீன நிறுவனத்திற்கு வழங்கிய செய்து கொண்ட உடன்படிக்கை தொடர்பில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதனை கூறியுள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகத்தை விற்பனை செய்யும் திட்டத்தை பிரதமர் அண்மையில் உருவாக்கவில்லை.
கொழும்பில் நடைபெற்ற பொருளாதார மாநாடு ஒன்றில் பேசிய பிரதமர் அம்பாந்தோட்டை துறைமுகத்தின் மூலம் 2 பில்லியன் டொலர்களை ஈட்ட உள்ளதாக கூறியிருந்தார்.
அத்துடன் அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு வழங்கும் தேவை இருக்குமாயின் எனது தந்தை ஜனாதிபதியாக இருக்கும் போதே அதனை வழங்கியிருக்க முடியும்.
அன்றைய அரசாங்கம் சீனாவிடம் மாத்திரமல்ல இந்தியா உட்பட மேற்குலக நாடுகளிடமும் உதவியை பெற்றுக்கொண்டது.
அம்பாந்தோட்டை துறைமுகத்தின் நிர்மாணிக்கும் முதல் கட்டப் பணிகளுக்காக 450 மில்லியன் டொலர்கள் செலவானது.
இரண்டாம் கட்டத்திற்கு செலவிடப்பட்ட தொகை தொடர்பான புள்ளி விபரங்களை கிடைக்கவில்லை எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.