கம்மன்பிலவின் சவாலை ஏற்றுக்கொண்ட ரஞ்சன் ராமநாயக்க

Report Print Steephen Steephen in அரசியல்
154Shares

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தனக்கு எதிராக 500 மில்லியன் ரூபா இழப்பீடு கோரி சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்ப போவதாக நேற்று கூறியதாகவும் அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக உள்ளதாகவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.

விளக்கமறியலில் வைக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு விதையில் காணப்படும் உபாதை காரணமாக மொத்தை ஒன்றை பெற்றுக்கொண்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவே நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார்.

அது சம்பந்தமாக நான் முகநூலில் குறிப்பு ஒன்றை மாத்திரமே இட்டேன். எவ்வாறாயினும் எனது குறிப்பால் தனக்கு அவமதிப்பு ஏற்பட்டதாக கூறி எனக்கு எதிராக வழக்கு தொடரும் முன்னர் சட்டத்தரணி ஊடாக கடிதம் அனுப்பு உள்ளதாக கம்மன்பில கூறியுள்ளார்.

நான் கம்மன்பிலவின் சவாலை ஏற்று அவரை நீதிமன்றத்தில் சந்திக்க தயாராக இருக்கின்றேன். இது சம்பந்தமாக கருத்து வெளியிட வேண்டாம் என கம்மன்பில ஒருமுறை என்னிடம் கேட்டுக்கொண்டார்.

எனினும் ஊடகவியலாளர் சந்திப்பில் எனக்கு பகிரங்கமாக சவால் விடுத்துள்ளார். உதய கம்மன்பிலவிற்கு விதைகளில் உபாதை இருப்பது எனக்கு தெரியும் என்பதால், நீதிமன்றத்தில் முன்னிலையாக அஞ்சவில்லை எனவும் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments