சாகலவை காப்பாற்ற மஹிந்தவை சந்தித்த ரணில்!

Report Print Vethu Vethu in அரசியல்
595Shares

பிரதமர் ரணில் விக்ரமிங்கசிங்க மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு இடையில் இன்றைய தினம் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்றத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அமைச்சர் சாகல ரத்நாயக்க தொடர்பில் கலந்துரையாடல் மேற்கொள்வதற்காக இந்த சந்திப்பு இன்று இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகின்றது.

இதன்போது சாகல ரத்நாயக்கவுக்கு அழுத்தம் பிரயோகித்தல் தொடர்பில் மஹிந்த, ரணிலிடம் கோரிக்கை ஒன்று விடுத்துள்ளார் என தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த சந்திப்பின் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான தினேஷ் குணவர்தன, பந்துல குணவர்தன, விதுர விக்ரமநாயக்க, லொஹான் ரத்வத்தே, ஷேஹான் சேமசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Comments