பொலிஸ் மா அதிபர் குறித்து தீர்மானம் எடுக்க ஜனாதிபதிக்கு யோசனை

Report Print Steephen Steephen in அரசியல்

பொலிஸ் மா அதிபர் நடந்து கொள்ளும் விதம் குறித்து விசாரணை நடத்தி தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதிக்கு அறிவிக்க அரசியலமைப்புச் சபை தீர்மானித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் செயற்பாடுகள் சிக்கல் நிறைந்தது என இன்று கூடிய அரசியலமைப்புச் சபையில் பேசப்பட்டுள்ளது.

இரத்தினபுரியில் அண்மையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றின் போது பொலிஸ் மா அதிபரின் தொலைபேசிக்கு அழைப்பொன்று வந்த பின்னர், அவர் பகிரங்கமான இடத்தில் நடந்து கொண்ட விதம் தவறானது எனவும் இது சம்பந்தமான பொலிஸ் மா அதிபரிடம் விசாரிக்க உள்ளதாகவும் ஜனாதிபதி இதற்கு முன்னர் கூறியிருந்தார்.

எவ்வாறாயினும் பொலிஸ் மா அதிபரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருப்பதால், சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அரசியலமைப்புச் சபைக்கு இல்லை எனவும் இதனால், தீர்மானம் ஒன்றை எடுக்கும் பொறுப்பை ஜனாதிபதிக்கு வழங்குவது எனவும் அரசியலமைப்புச் சபை தீர்மானித்துள்ளது.

Comments