யுத்தத்தினால் அழிந்துபோன கைத்தொழில்கள் மீண்டும் அமைத்து கொடுக்கப்படும் - அமைச்சர் ரிஷாட்

Report Print Vino in அரசியல்
64Shares

வடக்கு கிழக்கு பிரதேசத்தில் இருந்த பெரு கைத்தொழில் மற்றும் சிறு கைத்தொழில் போன்றவற்றை கடந்த 25 வருட காலங்களாக நடந்த யுத்தம் அழித்து விட்டது என கைத்தொழில் மற்றும் வணிக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.

பண்டாரநாயக்க சர்வதேச மண்டபத்தில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் இணைந்து செயற்படும் நல்லாட்சியில், கைத்தொழில் துறையினை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை இந்த ஒரு வருட காலங்களாக முன்னெடுத்துளோம்.

இலங்கையில் சுற்றுலாத்துறை வளர்ச்சியடையவும், இந்த நாட்டுக்கான பொருளாதார மேம்பாட்டுக்கான ஒரு துறையாக இந்த நெசவு துறை அடையாளம் காணப்பட்டுள்ளது.

இந்த துறைசார் வேலைத்திட்டங்களை வடக்கு கிழக்கு பகுதியில் மேம்படுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை முன்னெடுத்து, பெண் தலைமைத்துவ குடும்பங்களுக்கும்,

தாய்மார்கள், தொழில் இல்லாமல் இருப்பவர்களை இதில் இணைத்து அவர்களுக்கான வாழ்வாதார நடவடிக்கைகளை மேம்படுத்த தமது அமைச்சு நடவடிக்கைகள் எடுக்கும் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மேலும் தெரிவித்துள்ளார்.

Comments