வட மாகாண சபைக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய இன்று மனித உரிமைகள் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்துள்ளது.
ஜாதிக ஹெல உறுமய கட்சியின் மேல் மகாண சபை உறுப்பினர் நிஸாந்த வர்ணகுலசூரிய இந்த முறைப்பாட்டை செய்துள்ளார். இதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
வடக்கில் பௌத்த விகாரைகளை அபிவிருத்தி செய்வதற்கு வட மாகாண சபையால் நிதி வழங்கப்பட மாட்டாது என்று வட மாகாண சபையால் தீர்மானமொன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.
பௌத்த மதத்திற்கு முன்னுரிமையளித்து, அதைப் பாதுகாக்க வேண்டும் என அரசியல் அமைப்பின் 9 ஆவது அத்தியாத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இவ்வாறானதொரு தீர்மானமொன்றை நிறைவேற்றுவது நாட்டின் அரசியமைப்புக்கு எதிரானதாகும். அதுமட்டுமல்ல, அடிப்படை மத சுதந்திரமும் இதனூடாக மீறப்பட்டுள்ளது.
எனவே, வட மாகாண சபையின் செயற்பாடுகளுக்கு எதிராக ஜாதிக ஹெல உறுமய சட்ட நடவடிக்கை எடுக்கும் என்று தெரிவித்துள்ளார்.