ஜெயாவின் மறைவால் இலங்கைக்கு அடித்த அதிஷ்டம்..!

Report Print Murali Murali in அரசியல்
2225Shares

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ.ஜெயலலிதா கடந்த 5ஆம் திகதி உயிரிழந்துள்ள நிலையில், அவரின் உயிரிழப்பு இலங்கைக்கு சாதகமான ஒன்று என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜாதிக ஹெல உறுமய கட்சியின் தேசிய அமைப்பாளர் நிசாந்த சிறி வர்னசிங்க இதனை தெரிவித்துள்ளதாக குறிப்பிட்டு கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இந்நிலையில், கடந்த காலங்களில் இலங்கைக்கு எதிராக பல பெண் அரசியல் வாதிகள் செயற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ள அவர், தற்போது அவர்கள் அரசியலில் இருந்து விலகிச் செல்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதன் காரணமாக இலங்கைக்கு தற்போது நல்ல காலம் பிறந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். மேலும் தமிழக முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவால் இலங்கைக்கு இருந்த மற்றும் ஒரு தலைவலி நீங்கியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த மாதம் இடம்பெற்ற அமெரிக்க ஜனாதிபதி தேர்தலுடன் ஹிலரி கிளின்டன், சமந்தா பவர் மற்றும் நிஷா பிஸ்வால் போன்றவர்களும் ஓரம் கட்டப்படுவர்கள்.

எனவே, இதுவும் இலங்கைக்கு மிகவும் சாதகமானது எனவும் அவர் தெரிவித்துள்ளதாக அந்த ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments