இலங்கைக்கு எதிராக ஐக்கிய நாடுகள் சபையில் கூட்டு யோசனை ஒன்றை முன்வைக்க, முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இதன்கீழ் எதிர்வரும் 9ஆம் திகதியன்று சென்னையில் உயர் சட்டத்தரணிகள், சட்டத்துறை தலைவர்கள் கூடி ஆராயவுள்ளனர்.
இலங்கையின் 6 வது திருத்தச்சட்டம், பேச்சு சுதந்திரத்தை மீறுவதாக குற்றம் சுமத்தியே இந்த யோசனை முன்வைக்கப்படவுள்ளது.
இதன்காரணமாக, இலங்கையில் தமிழர்கள் சுயநிர்ணய உரிமைக்கு பாதிக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டியே இந்த யோசனை கொண்டு வரப்படவுள்ளது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் அனுசரணையில் அமரிக்க முன்னாள் சட்டமா அதிபர் ரம்ஸி கிளார்க், இந்திய முன்னாள் நீதிபதி கே பி சிவசுப்பிரமணியம் ஆகியோர் இந்த யோசனையை முன்வைக்கவுள்ளார்கள்.