மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி ஏற்படும் - சாகல

Report Print Steephen Steephen in அரசியல்
66Shares

இலங்கை - சீனா அபிவிருத்தி வலயத்தை உருவாக்குவது வேலைவாய்ப்பு பிரச்சினைக்கு தீர்வு காணும் போராட்டம் எனவும் இதன் மூலம் மிகப் பெரிய பொருளாதார வளர்ச்சி தென்பகுதிக்கு கிடைக்கும் எனவும் தென் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஹம்பாந்தோட்டையில் இன்று நடைபெற்ற இலங்கை - சீனா அபிவிருத்தி வலயத்தை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனை கூறியுள்ளார்.

இந்த திட்டத்தை ஆரம்பித்து வைப்பதற்காக ஜனாதிபதி மற்றும் பிரதமர் உட்பட உதவி அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக்கொள்வதாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அமைச்சர்,

தென் பகுதிக்கு இன்று மிகவும் முக்கியமான நாள். வேலையில்லா திண்டாட்டம் இந்த பிரதேசத்தில் காணப்படும் மிகப் பெரிய பிரச்சினை.

வேலையில்லா திண்டாட்டத்தை ஒழிக்க வேலைத்திட்டம் ஒன்றை ஆரம்பித்துள்ளோம்.

இது துறைமுகத்தையும் பொருளாதார வலயத்தையும் முன்னேற்றும் வேலைத்திட்டம் அல்ல. முழு தென்பகுதியிலும் பாரிய பொருளாதார முன்னேற்றம் ஏற்படும் வேலைத்திட்டம்.

இதன் மூலம் மறைமுகமான பல வேலை வாய்ப்புகள் உருவாகும். விவசாயத்திற்கு பலம் கிடைக்கும் எனவும் அமைச்சர் சாகல ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Comments