பலமிக்க நாடாக இலங்கை உருவாக்கப்படுவதை எவரும் தடுக்க முடியாது: பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்
121Shares

பலமிக்க புதிய இலங்கையை உருவாக்குவதை எவராலும் தடுத்து நிறுத்த முடியாது எனவும் வலுவான நிரந்தர எதிர்காலத்தை ஹம்பாந்தோட்டையில் ஆரம்பிப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

நிரந்தர யுகத்தின் மூன்றாவது ஆண்டு ஆரம்பிக்கும் இந்த சந்தர்ப்பத்தில் நாட்டின் இளைஞர், யுவதிகளுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் மிகப் பெரிய அபிவிருத்தித் திட்டத்தை இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்துள்ளதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.

மிகப் பெரிய அபிவிருத்தி வலயத்தை ஏற்படுத்தும் இலங்கை - சீனா அபிவிருத்தி வலயத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளை இன்று ஹம்பாந்தோட்டையில் ஆரம்பித்து வைத்து உரையாற்றும் போதே பிரதமர் ரணில் விக்ரமசிங்க இதனை குறிப்பிட்டுள்ளார்.

நாட்டில் வாழும் சாதாரண மக்களுக்கு சிறந்த வாழ்க்கையை பெற்றுக்கொடுப்பதற்காகவே 2015 ஆம் ஆண்டு ஜனவரி 8 ஆம் திகதி மைத்திரிபால சிறிசேனவை இந்நாட்டின் ஜனாதிபதியாக தெரிவு செய்தோம்.

இளைஞர், யுவதிகளுக்கு சிறந்த எதிர்காலத்தை ஏற்படுத்தக்கொடுக்கவே நாங்கள் தேசிய அரசாங்கத்தை அமைத்தோம். நாட்டை முன்னேற்றுவதற்காக நாங்கள் இணைந்து கொண்டோம்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஹம்பாந்தோட்டையில் பாரிய அபிவிருத்தியை ஆரம்பிப்போம்.

நாங்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகம் பற்றி பேசினோம். மகிந்த ராஜபக்ச ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிர்மாணித்தார். முதலீடுகள் வரும் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும் அது நடக்கவில்லை.

இந்த பிரதேசத்திற்கு முதலீட்டு தொழிற்சாலைகள் கிடைக்கவில்லை. துறைமுகத்தில் பொருட்களை ஏற்றிச் செல்லும் கப்பல்கள் இருக்கவில்லை.

2014 ஆம் ஆண்டு ஹம்பாந்தோட்டை துறைமுகத்தின் நஷ்டம் 983 மில்லியன் ரூபா, கடனை செலுத்த வேண்டியிருந்தது, கடனை செலுத்தும் பலம் இருக்கவில்லை, இலாபம் பெறவும் பலம் இருக்கவில்லை, பெரும் நெருக்கடியில் இருந்தோம், தாயும் பிள்ளையும் இறக்கும் தருவாயில் இருந்தனர், எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடினோம், கடனை இரத்துச் செய்ய முடியவில்லை.

நாங்கள் சீனாவுக்கு சென்று இது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினோம். இது பற்றி விசேட கவனத்தை செலுத்தினோம், இந்த பிரதேசத்தை மிகப பெரிய கைத்தொழில் மயமாக மாற்ற வேண்டும். இதற்கு 2 ஆயிரத்து 500 தொழிற்சாலைகள் வரை தேவை.

முதலில் நாங்கள் இணைந்து பொருளாதார குழு தொடர்பாக பேசினோம். தேவையான காணிகள் இருக்கின்றனவா எனக் கேட்டனர்.

சீனா 15 ஆயிரம் ஏக்கர் நிலம் தேவை எனக் கூறியது. நாங்கள் அனைத்து வரிச் சலுகைகளையும் வழங்க முடியாது என்றோம்.

இதனடிப்படையில் வேலைகளை ஆரம்பித்தோம். நாங்கள் இணைந்து வேலைகளை ஆரம்பித்தோம். சீன அரசாங்கம் இரண்டு நிறுவனங்களை பெயரிட்டது.

அன்று கையெழுத்திட்டோம். 2014ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இது ஆரம்பிக்கப்பட்டது. தொழிற்சாலைகள் தேவை என அப்போதே தெரிந்து கொண்டோம்.

எமது சுமை குறையும். வற் வரியில் இருந்து தப்பிக்கவே இதனை கொண்டு வந்தோம். எமக்கும் நிர்வாகத்தில் பங்கு அவசியம். விசேடமான நிர்வாக உரிமையை நாங்கள் வைத்து கொண்டோம். காலியில் உள்ள கடற்படை முகாம் ஹம்பாந்தோட்டைக்கு கொண்டு வர இணக்கம் காணப்பட்டது.

ருகுணு பொருளாதார வலயத்தில் ஆயிரத்து 235 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டது. எவருக்கும் சேதம் ஏற்படாத வகையில் நாங்கள் எம்பிலிப்பிட்டியவில் காணிகளை தேடி வருகின்றோம்.

இந்த காணிகளில் 95 வீதமான காணிகள் அரசுக்கு சொந்தமானவை. விகாரைகள், தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த காணிகளை கையகப்படுத்தப்பட மாட்டாது. ஷெங் ஷென் என்பது 2 ஆயிரம் சதுர கிலோ மீற்றருக்குள் வரும் அபிவிருத்தித் திட்டம் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Comments