பிரித்தானியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர மேற்கொள்ளவுள்ளார்.
இந்த மாதம் 9ஆம் திகதியிலிருந்து ஐந்து நாள் உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் புதிய பிரதமராக தெரேசா மே தெரிவானதை அடுத்து இதுவே பிரித்தானியாவிற்கான முதல் விஜயம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், புதிய பிரதமராக தெரேசா மே பதவியேற்றதை அடுத்து இலங்கையிலிருந்து பிரித்தானியாவிற்கு செல்லும் முதல் உயர் மட்ட விஜயமும் இதுவே என குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பிரித்தானியாவிற்கு இடையிலான இரு தரப்பு உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்த விஜயம் அமையும் என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக மற்றும் முதலீடுகளை ஊக்குவிக்கும் வகையில் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.