அரசியலமைப்புக்குழுக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பில் பிரச்சினை என்கிறார் மத்திய மாகாண முதலமைச்சர்!

Report Print Steephen Steephen in அரசியல்
35Shares

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்க நியமிக்கப்பட்டுள்ள அரசியலமைப்புக் குழுக்களில் அனைத்து இன மக்களின் பிரதிநிதித்துவம் தொடர்பான பிரச்சினை இருப்பதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க தெரிவித்துள்ளார்.

இந்த அரசியலமைப்புக் குழுக்கள் ஊடாக உண்மையில் மக்களின் கருத்துக்கள் வினவப்படுகின்றதா என்ற சிக்கலும் காணப்படுகிறது எனவும் முதலமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

தம்புள்ளை மாநகர சபையில் நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஒரு சிலர் இணைந்து நடத்தும் பேச்சுவார்த்தைகள் மக்களின் உண்மையான நிலைப்பாடுகளை பிரதிபலிக்காது எனவும் முதலமைச்சர் மேலும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments