உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதியை கட்சித் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும்: பிரதமர்

Report Print Steephen Steephen in அரசியல்
34Shares

உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்படும் திகதி சம்பந்தமாக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

அத்துடன் எந்த முறையில் தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்களே தீர்மானிக்க வேண்டும்.

இதனால், எந்த முறையில் தேர்தல் நடத்தப்படும் என்பது தமக்கு தெரியாது எனவும் பிரதமர் கூறியுள்ளார்.

இதனடிப்படையில், உள்ளூராட்சி சபைத் தேர்தல் எப்போது, எந்த முறையில் நடத்தப்பட வேண்டும் என்பதை அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீர்மானிக்க வேண்டும் எனவும் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

Comments