தாமரை மொட்டை கைவிடும் மகிந்த!

Report Print Steephen Steephen in அரசியல்
247Shares

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச அவரது அலுவலகத்தில் நேற்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தினார்.

ஊடக சந்திப்பில் கருத்து வெளியிடும் முன்னர் மேசையில் இருந்த தாமரை மொட்டுகளுடன் கூடிய மலர் செண்டை அங்கிருந்து அப்புறப்படுத்துமாறு அவர் கூறினார். அத்துடன் முன்னாள் அமைச்சர் ஜீ.எல்.பீரிஸ் வரும் போது அதனை வழங்குமாறும் குறிப்பிட்டார்.

மகிந்த ராஜபக்ச பெரிதாக விளம்பரம் செய்து, மக்களை தூண்டி விட்டு ஆரம்பித்த இலங்கை பொதுஜன முன்னணியின் சின்னமே தாமரை மொட்டு.

ஜீ.எல்.பீரிஸ் அந்த கட்சிக்கு பெயரளவிலான தலைவராக இருந்த போதிலும் மகிந்த ராஜபக்சவே அதன் தலைவராக செயற்பட்டு வந்தார்.

எனினும் தற்போது மகிந்த அதற்கு முன்னுரிமை கொடுக்காது செயற்படுவதன் மூலம் அவர் தனது அரசியல் அராஜக தன்மையை வெளிப்படுத்தியுள்ளதாக அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

Comments