வவுனியாவில் நடைபெற்ற தமிழரசுக்கட்சியின் மாவட்ட பொதுக் கூட்டம்

Report Print Thileepan Thileepan in அரசியல்
78Shares

இலங்கை தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட கிளையின் வருடாந்த பொதுக்கூட்டமும், புதிய நிர்வாக தெரிவும் இன்று காலை நடைபெற்றது.

குருமண்காட்டில் அமைந்துள்ள மாவட்ட காரியாலயத்தில் மாவட்ட கிளையின் தலைவரும், வடக்கு மாகாண சுகாதார அமைச்சருமாகிய ப.சத்தியலிங்கம் தலைமை தாங்கினார்.

இதன்போது புதிய நிர்வாக சபையிலே தலைவராக ப.சத்தியலிங்கம் அவர்களும், செயலாளராக சி.சிவசோதி அவர்களும், இவர்களுடன் இணைந்து 25 நிர்வாக குழு உறுப்பினர்களும் தெரிவு செய்யப்பட்டனர்.

வவுனியா நகர், செட்டிகுளம், வவுனியா வடக்கு ஆகிய பிரிவுகளை சேர்ந்த பல அங்கத்தவர்கள் இதில் கலந்து கொண்டனர்.

இதன்போது வவுனியாவிலே அண்மையிலே தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவரும், இலங்கை நாட்டின் எதிர்க்கட்சித் தலைவருமாகிய இரா. சம்மந்தன் ஜயா அவர்களின் உருவப்படம் சில விசமிகளால் எரிக்கப்பட்டதற்கு ஏகமனதாக வவுனியா மாவட்ட தமிழரசுக்கட்சியின் பொதுச்சபையினால் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Comments