புதிய அரசியல் அமைப்பு குறித்த அறிக்கையில் அரச சார்பற்ற நிறுவனங்களின் கருத்துகளே உள்வாங்கப்பட்டுள்ளதாக மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கூறியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பை உருவாக்கும் போது இலங்கையின் அனைத்து மக்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் மக்களின் கருத்துக்களை அறியும் முறைமையொன்றை கடைப்பிடிக்க முடியுமா என மத்திய மாகாண சபை முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்க கேள்வி எழுப்பியுள்ளார்.
புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் மக்கள் கருத்தறிவதற்காக நியமிக்கப்பட்டுள்ள குழுவால் நாடுமுழுவதும் மக்கள் கருத்தறியும் வகையில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை குறித்து கருத்து வெளியிட்டுள்ளபோதே அவர் இந்தக் கேள்வியை எழுப்பியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
குழு நியமிக்கப்பட்டு நாடுமுழுவதும் கருத்தறியும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அரச சார்பற்ற நிறுவனங்கள் போன்று வரையறுக்கப்பட்ட குழுக்களின் கருத்துகள் மட்டுமே அந்த அறிக்கையில் உள்ளடங்குவதாக, அந்த அறிக்கை வாசிக்கும்போது எனக்குத் தோன்றியது.
எனவே, மக்களிடம் மிகவும் நெருங்கி கருத்துக்களை உள்வாங்கக்கூடிய முறைமையொன்றை முக்கியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.