எல்லை நிர்ணய அறிக்கையை ஏற்குமாறு அமைச்சருக்கு சட்ட அறிவுரை

Report Print Ajith Ajith in அரசியல்
71Shares

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கையை ஏற்றுக்கொள்ளுமாறு உள்ளுராட்சி மாகாண சபைகள் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு சட்டஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

அமைச்சரின் கோரிக்கையை பரிசீலித்த பின்னரே இந்த சட்டஆலோசனை அவருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சின் தரப்புக்கள் தெரிவித்துள்ளன.

இந்த அறிக்கையில் ஏற்கனவே ஐந்து குழு உறுப்பினர்களும் கைச்சாத்திட்டுள்ளனர். இந்தநிலையில் ஐக்கிய தேசியக்கட்சியின் குழு உறுப்பினரும் அறிக்கையில் கைச்சாத்திட்டபின்னர் அதனை ஏற்றுக்கொள்ளுமாறு அமைச்சருக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே குறித்த அறிக்கையை அமைச்சர் பெற்றுக்கொள்ளாமல் நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments