இலங்கையை ஆராய்வதற்காக வரவுள்ள விசேட பிரதிநிதிகள் குழு

Report Print Gokulan Gokulan in அரசியல்
167Shares

இலங்கையின் பொருளாதார ஸ்திரத்தன்மையை அறிந்துக் கொள்வதற்காக பிரபல்யம் பெற்ற உறுப்பினர்களைக் கொண்ட குழுவொன்று இலங்கை வரவுள்ளது.

2017 ஆம் ஆண்டின் இலங்கையின் பொருளாதார மதிப்பீடு ஒன்றை குறித்த குழு வரைந்துள்ளது , இந்நிலையில் இவ்விடயம் தொடர்பில் ஆராய்வதற்காகவே குறித்த குழு இலங்கைக்கு வரவுள்ளது.

இலங்கையின் வெளிநாட்டு முதலீடு அண்மைக்காலமாக மந்த கதியிலேயே சென்று கொண்டிருக்கின்றது.

இந்நிலைமை தொடர்ந்தால் எதிர்காலத்தில் இலங்கையில் அரசியல் ரீதியான பாதிப்புகள் எற்படும். எனவே திட்மிட்டிருந்த சில முக்கியமான வர்த்தகம் மற்றும் அபிவிருத்தி பாதிப்புக்குள்ளாகும்.

இந்நிலைமையை மாற்றியமைக்க வேண்டியது அரசின் பொறுப்பு என அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் குறித்த குழு எந்த நாட்டை சேர்ந்தது, என்பது தொடர்பிலான விடயங்கள் எதிர்வரும் வாரங்களில் வெளியிடப்படும் என அவ்வறிக்கைளில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

Comments