உரிமைக்காக போராடிய மக்கள் மீது குண்டர்களை ஏவியது அரசாங்கம்!– மகிந்த

Report Print Samy in அரசியல்
82Shares

அம்பாந்தோட்டையில் தமது காணி உரிமைகள் பறிக்கப்படுவதற்கு எதிராக போராடிய மக்களின் மீது அரசாங்க குண்டர்கள் தாக்குதல் நடத்தியிருப்பதாக, அஸ்கிரிய, மல்வத்த பீடாதிபதிகளிடம், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச முறையிட்டுள்ளார்.

தலதா மாளிகையில் நேற்று வழிபாடு செய்த மகிந்த ராஜபக்ச, அஸ்கிரிய, மல்வத்த பீடங்களின் மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து, தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து விளக்கமளித்துள்ளார்.

இதன்போதே, சீனாவுக்கு 15 ஆயிரம் ஏக்கர் காணிகள் வழங்கப்படுவதற்கு எதிராகவே மக்கள் போராட்டம் நடத்தினர். தமது உரிமைகளுக்காக போராட்டம் நடத்திய மக்கள் மீது அரசாங்கம் குண்டர்களை ஏவி விட்டு தாக்குதல் நடத்தியுள்ளது.

மகா சங்கத்தைச் சேர்ந்த பிக்குகளும் கூட பொலிஸாரினால் தாக்கப்பட்டுள்ளனர்.

நீதியைக் கேட்கும் மக்களை கற்களால் தாக்கியோ, நீர்ப் பீரங்கியால் தாக்கியோ தடுத்து நிறுத்த முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- Puthinappalakai

Comments