நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல நிறைவேற்று அதிகாரம் தேவை!

Report Print Kamel Kamel in அரசியல்
109Shares

நாட்டை சரியான வழியில் இட்டுச் செல்ல நிறைவேற்று அதிகாரம் தேவை என பெவிதி ஹன்ட அமைப்பின் தலைவர் முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் மேலும் கூறுகையில்…

அம்பாந்தோட்டை பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற முரண்பாட்டு நிலைமை துரதிஸ்டவசமானது.

நிறைவேற்று அதிகாரத்தை சரியான முறையில் பயன்படுத்தி நாட்டை சரியான வழியில் நகர்த்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோருகின்றோம்.

பௌத்த பிக்குகள் மீது கை வைக்க எவருக்கும் இடமளிக்கப்பட முடியாது. சிலர் சொல்வது ஒன்று செய்வது வேறொன்றாகும்.

நாட்டில் இடம்பெற்று வரும் சில செயற்பாடுகள் தொடர்பில் எமக்கு பிரச்சினைகள் உண்டு.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற சம்பவம் மிகவும் கவலைக்குரியது.

இந்த நாடு புத்தருக்கு காணிக்கையாக்கப்பட்ட நாடு என்பதனை எவரும் மறந்து விடக் கூடாது.

அரசாங்கத்திற்கு பணம் இல்லையென்றால், எம்மிடம் கூறினால் வீடு வீடாக சென்று பிச்சை எடுத்து தருகின்றோம்.

அரசாங்கம் தவறிழைத்தால் மக்கள் வீதியில் இறங்கி போராடுவார்கள்.

பணம் இல்லை என்ற காரணத்தைக் காட்டி நாட்டின் வளங்களை விற்பனை செய்ய வேண்டாம்.

நாட்டில் இடம்பெற்று வரும் தவறுகள் தொடர்பில் மாநாயக்கத் தேரர்கள் உன்னிப்பாக அவதானிக்க வேண்டும்.

மக்களுக்கு ஏதேனும் பிரச்சினைகள் ஏற்பட்டால் அதற்கு எதிராக குரல் கொடுக்க நாம் பின்நிற்கக் கூடாது என முரத்தட்டுவே ஆனந்த தேரர் தெரிவித்துள்ளார்.

Comments