துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்றும், மரணம் நிகழ வேண்டும் என்றும் எதிர்பார்த்தனர்!

Report Print Kamel Kamel in அரசியல்
461Shares

போராட்டம் நடத்துவோர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என்ற எதிர்பார்ப்பில் சில தரப்பினர் துண்டுதல்களை மேற்கொண்டதாக புரவசி பலய அமைப்பின் இணை அழைப்பாளர் காமினி வியான்கொட தெரிவித்துள்ளார்.

அம்பாந்தோட்டையில் இடம்பெற்ற போராட்டம் தொடர்பில் கொழும்பு ஊடகமொன்று எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.அவர் மேலும் கூறுகையில்…

மக்கள் வீதியில் இறங்கி போராட்டம் நடத்திய போது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் ஆட்சிக் காலத்தில் போன்று துப்பாக்கிச் சூடு நடத்தப்படும் என எதிர்பார்த்தனர். மரணங்கள் பதிவாக வேண்டும் என்ற எண்ணத்தில் செயற்பட்டுள்ளனர்.

நீண்ட கால பொருளாதார இலக்குகளை முன்னிலைப்படுத்தி அரசாங்கம் நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் அரசியல்வாதிகள் அதனை தடுக்க நினைப்பது துரதிஸ்டமானதேயாகும்.

போராட்டம் நடத்தக் கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது, பெயர் குறிப்பிட்டும் சிலருக்கு தடை உத்தரவு பிறப்பித்திருந்தது.

எனினும் இவ்வாறு தடை விதிக்கப்பட்டவர்களும் போராட்டத்தில் பங்கேற்றிருந்தனர்.

இந்த விடயம் குறித்து அரசாங்கம் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென காமினி வியான்கொட கோரியுள்ளார்.

Comments