நாட்டின் 3 வருட நிலைபேறான அபிவிருத்தி தொடர்பான ஆரம்பம்!

Report Print Gokulan Gokulan in அரசியல்
31Shares

நேற்றைய தினம் கொழும்பில் ஆரம்பமான 3 வருடநிலைபேறான அபிவிருத்தி திட்டம் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்பது எதிர்பார்ப்பு.

அனைவரும் எதிர்பார்த்த திட்டமாக இது அமைய வேண்டும்.

இலங்கைவந்துள்ள, இந்திய ஆந்திர மாநில முதல்வர் இலங்கையின் வறுமை ஒழிப்பு திட்டத்திற்குபூரண ஆதரவுதருவதாக தெரிவித்துள்ளார்.

ஆந்திரமாநிலம் இந்திய தொழில்நுட்பதுறையில் சிறந்து விளங்கும் மாநிலமாகும். எனவே தொழில்நுட்ப உதவிகளையும் வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் இந்த சந்தர்ப்பத்தை பிரயோசனமான முறையில் பயன்படுத்தி கொள்ள வேண்டும்.

நேற்றைய நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே, ஆந்திர மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு, இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கம் நட்புறவு வெளிநாட்டு கொள்கை ஊடாக சிறந்த பெறுபேறுகளைபெற வேண்டும்.

கடன்தொகைகளாக பெறாமல் நன்கொடையாக சில உதவிகளை நட்புறவு நாடுகளிடம் இருந்து பெறவேண்டும் என்பதே புத்திஜீவிகளின் எதிர்பார்ப்பு.

அவ்வாறு செய்யும்போது, இலங்கையின் கடன் பளுவை அதிகரிக்காமல் அபிவிருத்தி இலக்குகளை அடையலாம் என்பது திண்ணம்.

Comments