பிரதமருக்கும் அரசியல் கட்சிகளின் தலைவர்களுக்கும் இடையில் விசேட பேச்சுவார்த்தை

Report Print Steephen Steephen in அரசியல்
57Shares

உள்ளூராட்சி சபைகளின் எல்லை நிர்ணயம் சம்பந்தமாக பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் கட்சித் தலைவர்களுக்கும் இடையில், இன்று நாடாளுமன்ற கட்டிடத் தொகுதியில் விசேட பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளது.

இந்த பேச்சுவார்த்தையில் எல்லை நிர்ணய அறிக்கையின் தாமதம் மற்றும் அதற்கு மாற்று யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

எல்லை நிர்ணய அறிக்கையில் காணப்படும் குறைப்பாடுகள் காரணமாக எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலை பழைய முறையில் நடத்துவது சம்பந்தமாக இன்று தீர்மானம் எடுக்கப்படும் என நம்பிக்கையான தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

எல்லை நிர்ணய அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ள போதிலும் உள்ளூராட்சி சபைகள் அமைச்சர் அதனை இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை.

Comments