அபிவிருத்திக்கான சட்ட மூலம் தொடர்பில் கிழக்கு முதல்வர் பொய் கூறுகின்றார் : பிள்ளையான் குற்றச்சாட்டு

Report Print Kumar in அரசியல்

அபிவிருத்திக்கான விசேட சட்ட மூலம் கிழக்கு மாகாணசபை உறுப்பினர்களினால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும் அது தொடர்பில் கிழக்கு மாகாண முதலமைச்சர் பொய்யான தகவல்களை தெரிவித்துள்ளதாகவும் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குறிப்பிட்டுள்ளார்.

மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றுக்கு இன்று கொண்டு வரப்பட்ட அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே இவ்வாறு தெரிவித்தார். தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவித்த அவர்,

கடந்த மாதம் 11ஆம் திகதி கிழக்கு மாகாணசபையில் விசேட கூட்டம் நடைபெற்றது. அதன்போது அபிவிருத்திக்கான விசேட சட்டமூலம் நிராகரிக்கப்பட்டது.

ஆனால் கிழக்கு முதலமைச்சர் அவர்கள் இதனை நிராகரிக்கவில்லையென கூறியுள்ளார். அவர் பொய்கூறுகின்றார் எனவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Comments